தேசிய செய்திகள்

பீகாரில் வங்கியில் ரூ.1.19 கோடி கொள்ளை; துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் துணிகரம் + "||" + 1.19 crore bank robbery in Bihar; Venture robbers at gunpoint

பீகாரில் வங்கியில் ரூ.1.19 கோடி கொள்ளை; துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் துணிகரம்

பீகாரில் வங்கியில் ரூ.1.19 கோடி கொள்ளை; துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் துணிகரம்
பீகாரின் வைஷாலி மாவட்டத்துக்கு உட்பட்ட ஹாஜிப்பூரில் எச்.டி.எப்.சி. தனியார் வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 கொள்ளையர்கள் திடீரென புகுந்தனர். பின்னர் வங்கி காசாளரை துப்பாக்கி முனையில் மிரட்டியவாறு, வங்கிக்குள் இருந்த ரூ.1.19 கோடியை கொள்ளையடித்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்தபோதே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த கொள்ளை தொடர்பாக உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வங்கிக்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள், அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ரூ.1.19 கோடியை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை கைது செய்யும் பணிகளை அவர்கள் முடுக்கி விட்டனர். வங்கியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.