தேசிய செய்திகள்

முதல்-மந்திரி மாற்றம் இல்லை என்றால் எடியூரப்பாவுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சித்தராமையா கேள்வி + "||" + If there is no change in the CM, why not take action against those who spoke out against Yediyurappa? Chitramaiya question

முதல்-மந்திரி மாற்றம் இல்லை என்றால் எடியூரப்பாவுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சித்தராமையா கேள்வி

முதல்-மந்திரி மாற்றம் இல்லை என்றால் எடியூரப்பாவுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சித்தராமையா கேள்வி
முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றம் செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று நாங்கள் யாரும் கேட்கவில்லை. அதுபற்றி டெல்லியில் ஆலோசனை நடைபெறுவதாக நான் கூறினேன். ஒருவேளை முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது இல்லை என்றால், அவருக்கு எதிராக கருத்துகளை கூறி வரும் எம்.எல்.ஏ.க்கள் பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் பெல்லத், மந்திரி சி.பி.யோகேஷ்வர் ஆகியோர் மீது பா.ஜனதா மேலிடம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?. பா.ஜனதாவில் முதல்-மந்திரி மற்றும் மேலிடம் இரண்டும் பலவீனமாக உள்ளது. எடியூரப்பா மாற்றம் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் மாற்றம் வேண்டும் என்று கூறியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கட்சியினருக்கு சொல்லப்படும் செய்தி என்ன.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து முடிவு எடுக்கவில்லை; மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து பா.ஜனதா மேலிடம் முடிவு எடுக்கவில்லை என்று மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறினார்.
3. முதல்-மந்திரியை மாற்றுவது குறித்து ஆலோசிக்க, கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவு? கர்நாடக அரசியலில் பரபரப்பு
முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து ஆலோசிக்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டும்படி எடியூரப்பாவுக்கு, பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்; மேற்கு வங்க தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தோல்விக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.
5. பா.ஜனதா அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பேச்சு: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல; மந்திரி ஈசுவரப்பா சாடல்
முதல்-மந்திரி எடியூரப்பாவை தரக்குறைவாக பேசுவது சித்தராமையாவுக்கு அழகல்ல என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.