தேசிய செய்திகள்

மல்யுத்த வீரர் சாகர் ராண கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது + "||" + Delhi Police's Crime Branch arrested one more person in connection with the murder of wrestler Sagar Rana

மல்யுத்த வீரர் சாகர் ராண கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

மல்யுத்த வீரர் சாகர் ராண கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது
மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு நபரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த மாதம் 4-ம் தேதி சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.

மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தான்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். 

இதையடுத்து, சாகர் தான்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார் மல்யுத்த வீரர் சுஷில் குமாரை தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த 23-ம் தேதி சுஷில் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுஷில் குமாரை 9 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கடந்த 2-ம் தேதி டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன் படி, சுஷில் குமார் தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிரையில், இந்த கொலைவழக்கில் தொடர்புடையை சுஷில்குமாரின் கூட்டாளிகள் 9 பேரை டெல்லி போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில், மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருநபரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று 124 பேருக்கு கொரோனா; 398 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 2,091 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. டெல்லியில் இன்று 135 பேருக்கு கொரோனா; 201 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 2,372 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. டெல்லியில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 158 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகம்
டெல்லியில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
5. டெல்லியில் அமையும் திமுக கட்சி அலுவலகம் - கட்டுமான பணிகள் தீவிரம்
டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தின் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.