‘இ-சஞ்சீவினி’ மருத்துவ ஆலோசனை சேவையை பெறுவதில் தமிழ்நாடு 2-வது இடம் - மத்திய சுகாதாரத்துறை தகவல்


‘இ-சஞ்சீவினி’ மருத்துவ ஆலோசனை சேவையை பெறுவதில் தமிழ்நாடு 2-வது இடம் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
x

‘இ-சஞ்சீவினி’ மருத்துவ ஆலோசனை சேவையை பெறுவதில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இணையதளம் வாயிலாக நோயாளிகள் மருத்துவரிடம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் மத்திய அரசால், ‘இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை’ தொடங்கப்பட்டது. இந்த சேவையின் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைகளை பறிமாறிக்கொள்ள முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 60 லட்சத்து 7 ஆயிரத்து 525 பேருக்கு, இ-சஞ்சீவினி டெலிமெடிசின் சேவை மூலம் இலசவ மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா 2வது அலையின் போது இந்த சேவை கிராமப்புற பகுதி மக்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருந்தது என மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த சேவையை பயன்படுத்துவதில் ஆந்திர மாநிலம் 12 லட்சத்து 19 ஆயிரத்து 689 பயனாளர்களுடன் முதல் இடத்திலும், தமிழ்நாடு 11 லட்சத்து 61 ஆயிரத்து 987 பயனாளர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story