தேசிய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் : புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் + "||" + Those who have completed driving training in driving schools can apply for a driver's license - Central government

ஓட்டுநர் உரிமம் : புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்

ஓட்டுநர் உரிமம் : புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மக்களுக்கு தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. 

இந்த புதிய நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.