தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு + "||" + Uttar Pradesh CM Yogi Adityanath paid a courtesy visit to President Ram Nath Kovind at Rashtrapati Bhavan today

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று டெல்லி வருகை தந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவையும் சந்தித்துப் பேசியிருந்தார். 

யோகி ஆதித்யநாத் மீது கட்சித்தலைமை அதிருப்தியில் இருப்பதாக பரவலாக ஊகங்கள் எழுந்த நிலையில், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை யோகி ஆதித்யநாத் அடுத்தடுத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில்  ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலத்தின் பொன்விழாவையொட்டி இமாசலபிரதேச சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
இமாசலபிரதேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.
2. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.
3. கொரோனா தொற்று முடிவடையவில்லை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி வலியுறுத்தல்
கொரோனா பெருந்தொற்று முடிவடையாததால் நாட்டு மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.
4. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றவுள்ளார்.
5. 75-வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை உரையாற்ற உள்ளார்.