தேசிய செய்திகள்

வைரஸ் தொற்றுக்கு மேலும் 159 பேர் பலி: கர்நாடகத்தில் புதிதாக 8,249 பேருக்கு கொரோனா + "||" + Karnataka reports 8,249 new cases, 159 deaths and 14,975 discharges today; the number of active cases in the State is 2,03,769

வைரஸ் தொற்றுக்கு மேலும் 159 பேர் பலி: கர்நாடகத்தில் புதிதாக 8,249 பேருக்கு கொரோனா

வைரஸ் தொற்றுக்கு மேலும் 159 பேர் பலி: கர்நாடகத்தில் புதிதாக 8,249 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 8,249 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை இன்றைய பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 8,249 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 47 ஆயிரத்து 539 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 159 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 14,975 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 11 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. 

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 769 ஆக குறைந்துள்ளது. 

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 4.86 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.92 சதவீதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.