மராட்டியத்தில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது


மராட்டியத்தில் 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 11 Jun 2021 4:34 PM GMT (Updated: 11 Jun 2021 4:34 PM GMT)

மராட்டியத்தில் இன்று புதிதாக 11,766- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை  உச்சம் பெற்று தற்போது சரியத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது அங்குள்ள மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது.

ஆனால், நேற்று  புதிதாக 12 ஆயிரத்து 207 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது. 

இன்று புதிதாக 11,766- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 58 லட்சத்து 87 ஆயிரத்து 853- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பு காரணமாக 406- பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 06 ஆயிரத்து 367- ஆக உள்ளது.  
 
இன்று கொரோனா பரிசோதனைகளும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று 2 லட்சத்து 54 ஆயிரத்து 301- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் 2 லட்சத்து 28 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருந்தன. 

Next Story