இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு: ஒரேநாளில் 4,002 பேர் பலி; புதிதாக 84,332 பேருக்கு தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Jun 2021 4:09 AM GMT (Updated: 12 Jun 2021 4:14 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,002 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் 5வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. 

நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையான 2,197 உடன் பீகார் அளித்த உயிரிழப்பு எண்ணிக்கையான 3,951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டு நேற்றுமட்டும் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,002 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 84 ஆயிரத்து 332 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 59 ஆயிரத்து 155 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 4,002 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,67,081 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 79 லட்சத்து 11 ஆயிரத்து 384 ஆக உயர்வடைந்து உள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 10,80,690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 24 கோடியே 96 லட்சத்து 304 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  

Next Story