கொரோனா 2-வது அலையின் போது உதவியதற்காக ஜி 7 நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி


கொரோனா 2-வது அலையின் போது உதவியதற்காக ஜி 7 நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
x
தினத்தந்தி 12 Jun 2021 10:43 PM GMT (Updated: 12 Jun 2021 10:43 PM GMT)

ஜி - 7 அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, ஜி - 7 அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் மீண்டும் சிறப்பாக உருவாக்குவது என்ற தலைப்பின் கீழ் விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா சூழலில் நான்கு முன்னுரிமை விஷங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வருதல் மற்றும் எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்கு எதிரான பாதிப்பை எதிர்கொள்ளுதல் போன்றவை குறித்த அமர்வு விவாதங்கள் நடைபெறுகின்றன.

இந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுடன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று ஜி 7 மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார். 

அப்போது  உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துதல் தொடர்பான கூட்டு முயற்சிக்கு  இந்தியா ஆதரவு அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், கொரோனா 2-வது அலையின் போது இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடுகளுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  

அதேபோல், தடுப்பூசி மூலப்பொருட்கள்  மற்றும்  இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்த உதவும் கூறுகள் ஆகியற்றிற்கான விநியோக சங்கிலியை தடையில்லாமல் தொடர வேண்டும் என்பது குறித்தும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

மேலும், எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த   உலகளாவிய ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும் ஆதரவு ஆகியவற்றிற்கும் அழைப்பு விடுத்த பிரதமர் மோடி,  வெளிப்படையான சமூகம் மற்றும் ஜனநாயக சிறப்பு பொறுப்பு ஆகியவை குறித்தும் வலியுறுத்தினார். 


Next Story