1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் நல மையங்களாக மாற்றப்படும் - மத்திய அரசு தகவல்


1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் நல மையங்களாக மாற்றப்படும் - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2021 1:58 AM GMT (Updated: 13 Jun 2021 1:58 AM GMT)

நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் நல மையங்களாக மாற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஏராளமான ஆரம்ப மற்றும் துணை சுகாதார மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் கிராமப்புறங்களில் கொரோனா சிகிச்சைப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த மையங்களை ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி 1,55,404 துணை சுகாதார மையங்களும், 24,918 கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களும், 5895 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களும் உள்ளன. இதில் 1½ லட்சம் துணை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் டிசம்பர் 2022-க்குள் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல மையங்களாக மாற்றப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story