தேசிய செய்திகள்

கொரோனா பரவல் தொடர்பாக நாடு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல் + "||" + ICMR to conduct nation-level sero surveys to access Covid-19 spread: Govt

கொரோனா பரவல் தொடர்பாக நாடு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

கொரோனா பரவல் தொடர்பாக நாடு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்
கொரோனா பரவல் தொடர்பாக நாடு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். ஆய்வு நடத்த உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா பரவலை மதிப்பிட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடுதழுவிய ஆய்வை நடத்த உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியில் உயரிய அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), கொரோனா பரவலை மதிப்பிடுவதற்காக நாடு முழுவதும் ‘செரோ’ ஆய்வை தொடங்க உள்ளது. அதுபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும். இதன்மூலம் அனைத்து புவியியல்சார்ந்த தகவல்களையும் பெற முடியும்.நாட்டில் கொரோனா நிலவரம் சீராகி வருகிறது. 

கடந்த மே 7-ந் தேதி தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், தினசரி கொரோனா பாதிப்பு 78 சதவீதம் குறைந்துள்ளது. அதுபோல், வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம், கடந்த ஏப்ரல் 30-ந் தேதிக்கும், மே 6-ந் தேதிக்கும் இடையிலான வாரத்தில் உச்சம் தொட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், வாராந்திர பாதிப்பு விகிதத்தில் 74 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதற்காக பொதுமக்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது. கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைத்தால்தான், நாட்டின் சுகாதார கட்டமைப்பு மீதான அழுத்தம் குறையும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
சென்னையில் கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
2. காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு
காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு அதிகாரி தகவல்.
3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பினை முன்னிட்டு கேரள எல்லையில் கோவை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.
4. கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு: மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே
கொரோனா பரவலால் ரயில்வேக்கு ரூ.36,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.
5. ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு பதில்
ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கப்படுமா என்பதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.