தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 2-வது நாளாக முழு ஊரடங்கு அமல் + "||" + Second day of complete lockdown in Kerala

கேரளாவில் இன்று 2-வது நாளாக முழு ஊரடங்கு அமல்

கேரளாவில் இன்று 2-வது நாளாக முழு ஊரடங்கு அமல்
கேரளாவில் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் கேரளாவில் 13,832 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 18,172 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே கேரளாவில் வரும் 16 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகள் இன்றி பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் பார்சல் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உணவை நேரடியாக சென்று விநியோகிக்கும் பணி மட்டுமே நடைபெறுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு உயர்வு; கேரளாவில் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்
கேரளாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.
2. கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் கல்வி மந்திரி ராஜினாமா கோரிக்கை நிராகரிப்பு; சட்டசபையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன
கேரள சட்டசபையில் 2015-ம் ஆண்டு பெரும் அமளி ஏற்பட்டது. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெற முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
4. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்வு: மாநில சுகாதாரத்துறை
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
5. கேரளாவில் புதிதாக 22,064 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 128 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,064 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.