தேசிய செய்திகள்

தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அழைப்பு + "||" + Government invites bids for delivery of COVID-19 vaccines to remote areas by drones

தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அழைப்பு

தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல டிரோன்களை பயன்படுத்த மத்திய அரசு அழைப்பு
தொலைதூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கு டிரோன்களை பயன்படுத்தும் முயற்சிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தொலைதூர பகுதிகள்
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகளில் மத்திய-மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்த தடு்ப்பூசிகள் அனைத்து பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அரசுகள் கவனமாக இருக்கின்றன.குறிப்பாக தொலைதூர பகுதிகள் மற்றும் செல்வதற்கு கடினமான பகுதிகளிலும் தடுப்பூசியை கொண்டு சேர்க்க மத்திய அரசு முனைந்து வருகிறது. இதற்காக நாட்டின் கடைசி மைல் தொலைவையும் திட்டத்துக்குள் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐ.சி.எம்.ஆர். ஆய்வு
இந்த பகுதிகளுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை கொண்டு சேர்க்க ஆளில்லா குட்டி விமானங்களை (டிரோன்கள்) பயன்படுத்த முயற்சிக்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.அதன்படி தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை டிரோன்கள் மூலம் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறு ஆய்வை கான்பூர் ஐ.ஐ.டி.யுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெற்றிகரமாக நடத்தியுள்ளது.அதன் முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில் டிரோன்கள் மூலம் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதற்கான நிலையான நெறிமுறை ஒன்றை வகுத்துள்ளது. அத்துடன் இந்த பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டு உள்ளது.

35 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்
கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பால் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் டிரோன் மூலம் தடுப்பூசியை வினியோகிக்கவும், மீண்டும் அதே இடத்துக்கு டிரோனை கொண்டு சேர்க்கவும் முடிந்த ஆபரேட்டர்களிடம் டெண்டர் தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். பேச்சுவார்த்தை நடத்தும்.குறிப்பாக, 4 கிலோ எடையுடன் செங்குத்தாக மேலெழும்பி, வான் வழியாக 35 கி.மீ. தொலைவு வரை சென்று வரும் திறன்பெற்றதாக டிரோன்கள் இருக்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆர். வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இந்த டிரோன்களுக்கான பணிக்காலம் 90 நாட்களாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. தற்போது டிரோன் ஆபரேட்டரின் திறமை மற்றும் திட்டத்துக்கான தேவைகளின் அடிப்படையில் இந்த பணிக்காலம் நீட்டிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் : மத்திய அரசு
பண்டிகை காலம் வரவிருப்பதால் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலுக்குப் பின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழிகாட்டுதல் வழங்கியபின்னர், 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
3. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 3 கோடி தடுப்பூசிகள் இருப்பு உள்ளது - மத்திய அரசு
நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் மொத்தம் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. ‘பெகாசஸ்’ உளவு விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியிடம் இப்போதும் விளக்கம் கேட்கலாம்; எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் எதிர்க்கட்சிகள் இப்போதும் விளக்கம் கேட்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூறினார்.
5. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.