தேசிய செய்திகள்

காஷ்மீர்: எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த ட்ரோன் விமானம் + "||" + One drone found in Garota area of Akhnoor sector of Jammu

காஷ்மீர்: எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த ட்ரோன் விமானம்

காஷ்மீர்: எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த ட்ரோன் விமானம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையோரம் செயலிழந்த நிலையில் கிடந்த டிரோன் விமானத்தை போலீசார் கைப்பற்றினர்.
ஸ்ரீநகர்,

இந்திய - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் கடந்த சில நாட்களாக எந்தவித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை.

ஆனாலும், இந்திய வீரர்களின் நிலைகளை கண்காணிக்க பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது கேமரா பொறுத்திய ட்ரோன் விமானங்கள் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் பறக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களும் டிரோன் மூலம் சப்ளை செய்யப்படுகிறது.   

இந்நிலையில், ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியான அக்நூர் செக்டாரில் உள்ள ஹரோடா பகுதியில் செயலிழந்த நிலையில் கிடந்த ட்ரோன் விமானத்தை ஜம்மு-காஷ்மீர் போலீசார் இன்று கண்டுபிடித்தனர்.

செயலிழந்த நிலையில் கிடந்த அந்த ட்ரோன் விமானத்தை கைப்பற்றிய போலீசார் இது யாரால் இயக்கப்பட்டது? பாகிஸ்தானில் இருந்து வந்ததா? டிரோன் விமானம் மூலம் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டனவா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 3 இடங்களில் டிரோன் நடமாட்டம்
காஷ்மீரில் ஒரே நாளில் 3 இடங்களில் டிரோன் நடமாட்டம் காணப்பட்டது.
2. காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் ஆய்வு
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
3. ஜம்மு மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனை - செல்போன்கள் பறிமுதல்
ஜம்மு மத்திய சிறைச்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகள் வைத்திருந்த 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
4. காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
5. காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் குல்ஹம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.