தேசிய செய்திகள்

இன்று வரை வயது வாரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரம் + "||" + 𝑽𝒂𝒄𝒄𝒊𝒏𝒆 𝑫𝒐𝒔𝒆𝒔: 𝑨𝒈𝒆-𝒘𝒊𝒔𝒆 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒃𝒖𝒕𝒊𝒐𝒏 (As on June 15th 2021, till 10:00 AM)

இன்று வரை வயது வாரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரம்

இன்று  வரை வயது வாரியாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரம்
நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2726 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,17,525 பேர் குணமடைந்துள்ளனர்.
 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,13,378 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

 ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் இன்று (ஜூன் 15) வரை 151வது நாளாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 10:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30.7 சதவீதம் பேருக்கும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோர்களில் 9.3 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30.7 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மத்திய சுகாதாரத் துறை போதிய தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயது வரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் இன்று வரை 151-வது நாளாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு 40 சதவிகிதமும், அதற்கு அடுத்தபடியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30.7 சதவீதமும், அதனைத் தொடர்ந்து 29.3 சதவீகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1.40 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 3 கோடி தடுப்பூசிகள் இருப்பு உள்ளது - மத்திய அரசு
நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் மொத்தம் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை
3. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. நியூயார்க்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு அறிவிப்பு
நியூயார்க்கில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டாலர்கள் பரிசு கிடைக்கும் என நியூயார்க் மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
5. இளம் பெண் டாக்டருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் டாக்டர் ஒருவருக்கு 13 மாதங்களில் மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.