அசாம், பஞ்சாப், மத்திய பிரதேசம் மாநில கொரோனா பாதிப்பு விவரம்


அசாம், பஞ்சாப், மத்திய பிரதேசம் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:00 PM GMT (Updated: 15 Jun 2021 6:00 PM GMT)

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் குறையத்தொடங்கியுள்ளது.

கவுகாத்தி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் சீராக சரிந்து வருகிறது.  அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 3415 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 34- பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பில் இருந்து 2906- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 39,837- ஆக உள்ளது. 

பஞ்சாபில் கடந்த 24 மணி நேரத்தில் 642- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 38- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,691- ஆக உள்ளது.  தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,802- ஆக உள்ளது. 

மத்திய பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  224- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 27- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 528- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3610- ஆக உள்ளது. 

Next Story