தினசரி கொரோனா பாதிப்பு 85 சதவிகிதம் குறைந்துள்ளது- மத்திய சுகாதாரத்துறை


தினசரி கொரோனா பாதிப்பு 85 சதவிகிதம்  குறைந்துள்ளது- மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 15 Jun 2021 6:33 PM GMT (Updated: 15 Jun 2021 6:33 PM GMT)

நாட்டில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தோடு ஒப்பிடும் போது தற்போது 85 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பாதிப்பு மே 7 ஆம் தேதி உச்சத்தில் இருந்தது. 

அதில் இருந்து தற்போது 85 சதவிகிதம் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.  இது மிகப் பெரிய முன்னேற்றம். இருப்பினும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 20 மாநிலங்களில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.

கடந்த சில நாள்களாக நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மே 10-ம் தேதி நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை சராசரியாக 37.45 லட்சமாக இருந்தது. 

தற்போது அது 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 2.9 சதவிகிதம். கொரோனா பாதிப்புகளைவிட குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் ஒட்டுமொத்தமாக குணமடைவோர் விகிதம் 95.6 சதவிகிதத்தை அடைந்துள்ளது” என்றார்.


Next Story