கொரோனா தடுப்பூசி விரைவில் போட்டுக்கொள்ளுங்கள்: ராகுல்காந்தி


கொரோனா தடுப்பூசி விரைவில் போட்டுக்கொள்ளுங்கள்: ராகுல்காந்தி
x
தினத்தந்தி 15 Jun 2021 7:24 PM GMT (Updated: 2021-06-16T00:54:58+05:30)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதற்காக கொரோனா ஒழிந்து விட்டதாக அர்த்தம் அல்ல. கொரோனா நம்முடன்தான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும்.இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதுடன், அனைவரும் கூடிய விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இல்லாவிட்டால், யாருமே பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story