கொரோனா பிரச்சினைக்கு ஊரடங்கு என்பது இறுதி தீர்வல்ல-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


கொரோனா பிரச்சினைக்கு ஊரடங்கு என்பது இறுதி தீர்வல்ல-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 15 Jun 2021 9:25 PM GMT (Updated: 15 Jun 2021 9:25 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு தலைநகர் பெங்களூருவில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதிகளவில் வாகனங்கள் ஓடுகின்றன. முதல் நாளிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதால், மக்கள் அதிகளவில் நடமாடுகிறார்கள்.

வெளியூர்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், பரிசோதனையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த வேண்டியுள்ளது. கொரோனா பிரச்சினைக்கு ஊரடங்கு என்பது இறுதி தீர்வல்ல. அதிகளவில் தடுப்பூசி போட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நிலை இருக்கிறது. பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”என்றார்.


Next Story