லட்சத்தீவில் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது


லட்சத்தீவில் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது
x
தினத்தந்தி 16 Jun 2021 11:17 AM GMT (Updated: 2021-06-16T16:47:05+05:30)

லட்சத்தீவில் இதுவரை 20 பேர் நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவரத்தி,

நாட்டின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாகியாக பிரஃபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. அவரது நியமனத்திற்கு பிறகு சீர்திருத்த நடவடிக்கைகளாக பள்ளிகளில் மாட்டு இறைச்சிக்கு தடை விதித்தது, மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்கியது உள்ளிட்ட உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த நிலையில் லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை (LDAR 2021) அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, அங்கு தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. நில உரிமையாலர்களிடம் தெரிவிக்காமல் இதுவரை 20 பேர் நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் பட்டேலை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அவர் நேற்று லட்சத்தீவிற்கு வந்துள்ளார். மேலும் வரும் 20 ஆம் தேதி வரை லட்சத்தீவில் தங்கி பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மதிப்பீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story