கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் உள்ளதா? - மத்திய அரசு விளக்கம்


கோவேக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம்  உள்ளதா? - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 16 Jun 2021 12:37 PM GMT (Updated: 2021-06-16T18:13:06+05:30)

கன்றுக்குட்டியின் உடலில் இருந்து எடுக்கப்படும் சீரத்தை வைத்து, வேரோ செல்கள் என்ற உயிருள்ள செல்கள் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

புதுடெல்லி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கிய கோவேக்சின் குறித்து காங்கிரஸ் தலைவர் கவுரவ் பாண்டி பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.

தனது டுவிட்டர் பதிவில்  ஒரு தகவல் அறியும் ஆவணத்தைப் பகிர்ந்து கொண்ட காங்கிரஸ் தலைவர், கோவேக்சினில் புதிதாகப் பிறந்த கன்றின் சீரம் இருப்பதாகக் கூறினார்.மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் விகாஸ் பட்னி அளித்த தகவல் அறியும் பதிலின் அடிப்படையில் கூறி உள்ளார்.

கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பில், புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுவதாகவும், ஆனால் தடுப்பூசி கடைசியாக பயன்பாட்டுக்கு வரும் போது அதில் அந்த சீரம் இருக்காது என்றும் அரசு தெரிவித்துள்ளதாக, கூறி உள்ளார்.

கன்றுக்குட்டியின் உடலில் இருந்து எடுக்கப்படும் சீரத்தை வைத்து, வேரோ செல்கள் என்ற உயிருள்ள செல்கள் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அதன்பின்னர் வேரோ செல்கள் நீர் மற்றும் வேதி பொருளால் சுத்திகரிக்கப்பட்டு அதில் உள்ள கன்றுக்குட்டிகளின் சீரம் நீக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் அந்த செல்களில் கொரோனா வைரசின் பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக, சொல்லப்படுகிறது. வைரஸ் வளரும் போது வேரோ செல்கள் முற்றிலுமாக அழிந்து விடுகின்றதாக கூறப்பட்டு உள்ளது 

பிறகு வைரஸ் கொல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, செயலற்ற வைரசில் இருந்து தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. எனவே தடுப்பூசி தயாரிப்பு முழுமை அடையும் போது அதில் கன்றுக்குட்டியின் சீரம் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.Next Story