ஆக்ராவில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு


ஆக்ராவில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 9:16 PM GMT (Updated: 2021-06-17T02:46:08+05:30)

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ககரோல் பகுதியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது.

ஆக்ரா, 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ககரோல் பகுதியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து மீட்புப்படையினர் விரைந்து வந்தனர்.

இடிபாடுகளுக்குள் இருந்து 9 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் 3 முதல் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story