டெல்டா மாறுபாடு கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு ஒரு டோஸ் 61 % செயல் திறன் கொண்டது என தகவல்


டெல்டா மாறுபாடு கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு ஒரு டோஸ் 61 % செயல் திறன் கொண்டது என தகவல்
x
தினத்தந்தி 17 Jun 2021 12:13 AM GMT (Updated: 2021-06-17T05:43:45+05:30)

இந்தியாவில் கடந்த மே 13 ஆம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12-16- வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

லண்டன்,

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளிகள் குறித்த விவாதம் அதிகரித்துள்ள நிலையில், ஒரு டோஸ் தடுப்பூசி 61 சதவீதம் செயல் திறன் கொண்டதாக உள்ளது என கோவிட் தொடர்பான நிபுணர் குழு தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் அதிகம் காணப்படும் டெல்டா வகை மாறுபாடு கொரோனாவுக்கு இத்தகைய 61 சதவீத எதிர்ப்பு திறன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவர் என்கே ஆரோரா இது பற்றி கூறுகையில், ”சமீபத்தில் தேசிய  கோவிட் எதிர்ப்பு திறன் புரோகிராம் துவங்கப்பட்டது. 4 வார இடைவெளியில் இது நடத்தப்பட்டது.  இதில்,  நோயெதிர்ப்புத் திறன் நல்ல அளவில்  உள்ளது தரவுகளில் தெரியவந்தது. 

இந்த நேரத்தில் இங்கிலாந்தில் ஏற்கனவே இரண்டு டோஸ்களுக்கும் இடையேயான கால இடைவெளி 12 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 வாரங்களுக்குப் பிறகு, 6-8 வார இடெவெளியை  கடைபிடிப்பது நல்ல யோசனை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. ஆனால், இங்கிலாந்து அளித்த எதார்த்த தரவுகளை கவனத்தில் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது” என்றார். 

இந்தியாவில் கடந்த மே 13 ஆம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளியை 6-8 வாரங்களில் இருந்து 12-16- வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது

Next Story