கேரளாவில் தண்ணீரில் ஸ்பிரிட் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு; 2 பேருக்கு தீவிர சிகிச்சை


கேரளாவில் தண்ணீரில் ஸ்பிரிட் கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு; 2 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 17 Jun 2021 2:13 AM GMT (Updated: 17 Jun 2021 2:13 AM GMT)

கேரளாவில் தண்ணீரில் ஸ்பிரிட் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர்.

கொல்லம்,

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனபுரம் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்து வருபவர் முருகானந்தன்.  இவர் தண்ணீரில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த கூடிய ஸ்பிரிட் கலந்து குடித்ததுடன், தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார்.

கேரளாவில் ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன.  மதுபானம் விற்பனை இல்லாத சூழலில் போதைக்காக இதுபோன்ற மாற்று வழிகளில் ஈடுபட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், இதனை குடித்த 4 பேருக்கும் சிறிது நேரத்தில் மயக்கம் வந்துள்ளது.  இதில், பிரசாத் என்பவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.  முருகானந்தன் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராஜீவ் மற்றும் கோபி ஆகிய இருவருக்கும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களது நிலைமை மோசமடைந்து உள்ளது.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story