இந்தியாவில் மேலும் 67,208 பேருக்கு கொரோனா பாதிப்பு


இந்தியாவில் மேலும் 67,208 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jun 2021 3:50 AM GMT (Updated: 17 Jun 2021 3:50 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 8-ம் தேதி முதல் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 67 ஆயிரத்து 208 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 570 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 91 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 2 ஆயிரத்து 330 பேர் உயிரழ்ந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 55 லட்சத்து 19 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 38 கோடியே 52 லட்சத்து 38 ஆயிரத்து 220 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த நேற்று ஒரேநாளில் 19 லட்சத்து 31 ஆயிரத்து 249 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  

Next Story