கொரோனா மரண அச்சம்: உயிர் காப்பீடு திட்டத்தில் 30% அதிக இளைஞர்கள் இணைந்தனர்


கொரோனா மரண அச்சம்:  உயிர் காப்பீடு திட்டத்தில் 30% அதிக இளைஞர்கள் இணைந்தனர்
x
தினத்தந்தி 17 Jun 2021 8:30 AM GMT (Updated: 2021-06-17T14:00:18+05:30)

கொரோனா மரணங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சியால் இந்திய இளைஞர்கள் உயிர் காப்பீடு திட்டத்தில் அதிக அளவில் இணைந்துள்ளனர்.புதுடெல்லி,

உலக நாடுகளில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்து கொரோனா பாதிப்புகளுக்கு அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.  இதுவரை, 3.8 லட்சத்திற்கும் கூடுதலானோர் மரணம் அடைந்துள்ளனர். 

எனினும், குறைந்த அளவிலான பரிசோதனையால் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்திருக்க கூடும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை உச்சம் தொட்டது.  இதில், அதிக பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை இருந்தது.

இதனால், 25 முதல் 35 வயது வரையிலான இந்தியர்கள் அதற்கு முந்தின 3 மாதங்களில் இல்லாத வகையில், உயிர் காப்பீடு திட்டத்தில் 30% கூடுதலாக இணைந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

காப்பீடுதாரர்கள், எவ்வளவு திட்டங்களை விற்று தீர்த்தனர் என்பது பற்றிய தகவல்களை வர்த்தக லாபநோக்கங்களுக்காக வெளியிடவில்லை.  எனினும், இந்த திட்டங்களின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

இன்சூரன்ஸ்தேக்கோ என்ற காப்பீடு திட்ட வெளியீட்டாளர்களிடம் இருந்து ஆன்லைன் வழியே வாங்கிய பருவகால காப்பீடு திட்டங்கள் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் 30% அதிகரித்து இருந்தது என்பதே இதற்கு சான்றாக உள்ளது.


Next Story