சாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி கென்னத் கவுன்டா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்


சாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி கென்னத் கவுன்டா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 17 Jun 2021 7:47 PM GMT (Updated: 2021-06-18T01:17:29+05:30)

சாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி கென்னத் கவுன்டா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி  கென்னத் கவுன்டா  தனது 97 வயதில் காலமானார். இந்த அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி  எட்வர்ட் லுங்கு பேஸ்புக்கில் வெளியிட்டார். கென்னத் கவுன்டா மகன் கம்ரேஞ்ச் கவுன்டாவும் அவரது மரணத்தை பேஸ்புக்கில் தெரிவித்தார். கென்னத் கவுன்டா முகநூல்பதிவில், “எம்.ஜி இல்லை என்று தெரிவிக்க வருத்தமாக இருக்கிறது. நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்திப்போம் என்றார்.

இந்நிலையில் சாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி  கென்னத் கவுன்டா  மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"உலகத் தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியுமான டாக்டர் கென்னத் கவுன்டா காலமானர் என்ற செய்தி  அறிந்து வருத்தம் அடைந்தேன்.

 அவரது குடும்பத்தினருக்கும் சாம்பியா மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story