கொரோனா தடுப்பு நடவடிக்கை: இந்தியாவில் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த கூகுள் ரூ.113 கோடி உதவி


கொரோனா தடுப்பு நடவடிக்கை: இந்தியாவில் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த கூகுள் ரூ.113 கோடி உதவி
x
தினத்தந்தி 18 Jun 2021 12:17 AM GMT (Updated: 2021-06-18T05:47:04+05:30)

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ.113 கோடி மதிப்பிலான உதவிகளை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா கொரோனாவின் 2-வது அலையில் சிக்கி தவித்த போது  பல உலக நாடுகள் உதவ முன்வந்தது. குறிப்பாக மருந்து பொருட்கள், சிகிச்சைக்கான தளவாடங்களை அனுப்பி வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு ரூபாய் 113 கோடி நிதி உதவி செய்வதாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இரண்டு அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவும் வகையில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகளை உருவாக்குவதற்கும், சுகாதார பணிகளுக்காகவும் ரூபாய் 113 கோடி கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகை மூலம் இந்தியாவில் 80 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இது தவிர கிராமப்புறங்களில் உள்ள சுகாதாரப் பணியாளா்களின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 

இது தொடா்பாக கூகுள் இந்தியாவின் நிறுவனத்தின் தலைவா் சஞ்சய் குப்தா கூறுகையில்,

 இந்தப் பெருந்தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் நோயின் தீவிரம் குறித்து தெரிந்து கொண்டு விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். 

அனைவருக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைக்க வேண்டும். அந்த வகையிலேயே கிராமப்புற மக்களுக்கு சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றார்.


Next Story