இந்தியாவில் மேலும் 62,480- பேருக்கு கொரோனா


இந்தியாவில் மேலும் 62,480- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Jun 2021 4:05 AM GMT (Updated: 18 Jun 2021 4:05 AM GMT)

இந்தியாவில் 73 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் வந்தது

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை உச்சம் பெற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சீராக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருவது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,480- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 88,977- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால்  ஒரே நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,587- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 656- ஆக குறைந்துள்ளது. 73 நாட்களுக்கு பிறகு 8 லட்சத்திற்கு கீழ் இந்த எண்ணிக்கை வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 96.03 சதவிகிதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3.24- சதவிகிதமாக உள்ளது. 11 நாட்களாக 5 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது. 



Next Story