7 பழங்களை பாதுகாக்க 4 காவலர்கள் 6 நாய்கள்...! மாம்பழத்தின் விலை ரூ.2.70 லட்சம்...!


Image courtesy : Kyodo News PR wire, AP
x
Image courtesy : Kyodo News PR wire, AP
தினத்தந்தி 18 Jun 2021 5:27 AM GMT (Updated: 18 Jun 2021 5:27 AM GMT)

மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை கடந்த ஆண்டு விற்பனை ஆகி உள்ளது.

போபால்

மத்திய பிரதேசத்தில்  மாம்பழ தோட்டத்தில் விளைந்துள்ள 7 மாம்பழங்களை பாதுகாக்க நான்கு காவலர்கள் மற்றும் ஆறு நாய்களை காவலுக்கு வைத்துள்ளார் தோட்டத்துக்கு உரிமையாளர்.என்னாடா 7 மாம்பழத்துக்கு இவ்வளவு காவலா என வினோதமாக இருப்பதை நீங்கள் எண்ணலாம். அந்த தோட்டத்தில் விளையும்  அரிய மாம்பழங்களின் விலையை நீங்கள் கேட்டால்  உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர்  மாம்பழ தோட்டம் வைத்து இருப்பவர்கள் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ர தம்பதிகள்.தங்களுடைய பழத்தோட்டத்தில் தெரியாமல் பயிரிட்ட மாம்பழ மரக்கன்றுகள் ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்கு சொந்தமானது என்பதை  அறிந்ததும் ஆச்சரியம் அடைந்தனர். உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக அறியப்படும்,  ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன, அவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட அதிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை கடந்த ஆண்டு விற்பனை ஆகி உள்ளது. 

 தங்களது 7 மாம்பழங்களை திருடர்களிடமிருந்து காப்பாற்ற இந்த தம்பதியினர் 4 பாது காவலர்களையும் 6 நாய்களையும் தங்கள் பழத்தோட்டத்தை  24 மணி நேரமும் பாதுகாக வைத்துள்ளனர்.

இதுகுறித்துசங்கல்ப் பரிஹார் கூறியதாவது:-

“கடந்த ஆண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த ஜப்பான் வகை மியாசாகி மாம்பழத்தை திருடி சென்றனர். இந்தியாவில் இந்த மாம்பழம் அரிதினும் அரிதாக காய்க்கும். இதன் விலையும் சர்வதேச சந்தையில் அதிகம். அதனால் இந்த முறை மியாசாகி பழங்களை காக்கவே காவலுக்கு ஆட்களையும், நாய்களையும் தோட்டத்தில் வைத்துள்ளோம்” என அவர் கூறினார்.

 சென்னையில்  ஒரு ரெயிலில் ஒரு மனிதரை சந்தித்ததாகவும்  அவர்களுக்கு அவர் அரிய ஜப்பானிய மா மரக்கன்றுகளை வழங்கினார். ஆரம்பத்தில், தம்பதியினருக்கு இந்த மாம்பழ வகை குறித்து  தெரியாது.  மரக்கன்றுகளை கொடுத்தவரின்  தாயான தமினியின் பெயரால் இந்த மாம்பழங்களை அழைக்கின்றனர்.

இந்த் மாமபழ வகை குறித்து அறிந்த் சில திருடங்கள் கடந்த ஆண்டு திருடி சென்று இந்த ஆண்டு, தம்பதியினர் பாதுகப்பு ஏற்பாடுகளைச் எய்து உள்ளனர். இருவருக்கும் தங்கள் மாம்பழங்களை  விற்கும் திட்டம் இல்லை. விதைகளை அதிக மரங்களை வளர்க்கப் பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளனர்.

ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் சிறப்பு தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. மாணிக்கங்களைப் போல சிவப்பு நிறத்தில் பளபளக்கும் அவை உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தவை. சர்வதேச சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ .2.70 லட்சத்திற்கு விற்கப்படுகின்றன என்று ஜப்பானிய ஊடக தகவவல்கள் தெரிவிக்கின்றன. ரூபி சிவப்பு நிறத்திற்கு 'சூரியனின் முட்டை' என்று அழைக்கப்படும் ஒவ்வொரு மாம்பழமும் தலா 21,000 ரூபாய் வரை விற்கலாம்.

Next Story