அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு


அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு
x
தினத்தந்தி 18 Jun 2021 9:02 AM GMT (Updated: 2021-06-18T14:32:43+05:30)

அசாமின் சோனித்பூர் நகரில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.சோனித்பூர்,

அசாமின் சோனித்பூர் நகரில் இன்று மதியம் 12.42 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 2.8 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருந்தது.  இந்நிலையில், அதே பகுதியில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதுதவிர, மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவாகி இருந்தது.  தொடர்ந்து மணிப்பூரிலும் ரிக்டரில் 3.0 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களில் சில மணி நேர இடைவெளிக்குள் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அசாமில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது மக்களிடையே அச்சம் ஏற்படுத்தியுள்ளது.


Next Story