உலக தலைவர்கள் பட்டியலில் செல்வாக்கு சரிந்தாலும் முதலிடத்தில் பிரதமர் மோடி


படம்: moneycontrol.com
x
படம்: moneycontrol.com
தினத்தந்தி 18 Jun 2021 9:42 AM GMT (Updated: 2021-06-18T16:47:42+05:30)

பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய ஒப்புதல் மதிப்பீடு 66 சதவீதமாக சரிந்துள்ளது ஆனால் மற்ற உலக தலைவர்களை விட அதிகம் உள்ளது.

புதுடெல்லி:

 அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின் படி, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற உலகளாவிய தலைவர்களை விட தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கூறி உள்ளது.

கொரோனா  தொற்றுநோயின் பேரழிவு தரும் இரண்டாவது அலைகளின் போது பிரபல மதிப்பீடுகளில் சரிவு இருந்தபோதிலும், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு 66 சதவீதமாக உள்ளன. இது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட நாடுகளின் உலகத் தலைவர்களை விட சிறந்ததாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் உலகளாவிய ஒப்புதல் மதிப்பீடு 66 சதவீதமாகக் குறைந்துள்ளது. நரேந்திர மோடிக்கு 665 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது ஒப்புதலை தெரிவித்துள்ளனர்.   இது ஒரு வருடத்திற்கு முன்பு 75 சதவீதமாக இருந்தது.பிரதமர் மோடியை சுமார் 28 சதவீதம் பேர் ஏற்கவில்லை, இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 20 சதவீதமாக இருந்தது.

இந்தியாவில் 2,126 க்கும் மேற்பட்டவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில்  மார்னிங் கன்சல்ட் ஆய்வு நடத்தி உள்ளது. உலக்தலைவர்கள்  ஒப்புதல் மதிப்பீடு டிராக்கர் கடைசியாக ஜூன் 17 அன்று புதுப்பிக்கப்பட்டது.

கொரோனா தொற்றுநோய் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, 2020 மே 2-3 அன்று பிரதமரின் ஒப்புதல் மதிப்பீடு 84 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய செல்வாக்கு ஒப்புதல் மதிப்பீட்டில் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி (65 சதவீதம்) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.  மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் (63 சதவீதம்) இரண்டாவது இடத்தையும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 54 சதவீதத்துடன் உடன் நான்காவது இடத்தையும், ஜெர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் 53 சதவீதத்துடன் 5-வது  இடத்தையும் பிடித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பிடன் 53 சத்வீத  ஒப்புதல் மதிப்பீட்டுடன் 6வது இடத்தை பிடித்து உள்ளார்.  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 48 சதவீதத்துடன் 7 வது இடமும்  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 44 சதவீதத்துடன் 8 வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.  தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 37 சதவீதத்துடனும்,  ஸ்பெயின்  பெட்ரோ சான்செஸ் 36 சதவீதத்துடனும் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ 35சதவீதத்துடனும் , பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் 35 சதவீதத்துடனும்  ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா 29 சதவீதத்துடனும் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.Next Story