‘கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் தயாராக வேண்டும்’ - மாயாவதி வலியுறுத்தல்


‘கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் தயாராக வேண்டும்’ - மாயாவதி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jun 2021 8:53 PM GMT (Updated: 2021-06-19T02:23:40+05:30)

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாநில அரசுகள் தயாராக வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியுமான மாயாவதி நேற்று வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘எல்லா இடங்களிலும், எல்லோருக்கும் எளிதாக கொரோனா தடுப்பூசி கிடைத்தால்தான், தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் பங்கேற்பை உறுதிசெய்ய முடியும். 

கொரோனா 2-வது அலையின்போது செய்ததைப் போல, எல்லா மட்டங்களிலும், குறிப்பாக கிராமப்புறங்களில் முன்கூட்டிய ஏற்பாடுகளை செய்தால்தான், 3-வது அலை வந்தால் அதிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும். கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் தயாராக வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கொண்டுவரவும், பொருளாதாரத்தை முன்னேற்றத்தை நோக்கிச் செலுத்தவும் அனைத்து அரசுகளும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.

கொரோனாவால் எழுந்துள்ள மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது முக்கியம். இல்லாவிட்டால் நாட்டின் சுயசார்பு பாதிக்கப்படும். மக்கள் மோசமான நாட்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story