வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் மூன்றாம் அலை ஏற்படலாம் - டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை


வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் மூன்றாம் அலை ஏற்படலாம் - டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Jun 2021 10:07 PM GMT (Updated: 18 Jun 2021 10:07 PM GMT)

கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதனால் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில், மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.சமூக இடைவெளியை பின்பற்றாமல், மக்கள் கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதது, டெல்லி உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது.

'கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால், அது, மூன்றாம் அலையை ஏற்படுத்த வழிவகுத்திடும்' என டெல்லி  ஐகோர்ட் எச்சரித்தது. தற்போது நிலவும் சூழல் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியது. பொதுவெளிகளில் விதிகளை மீறி நடப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Next Story