ஆந்திராவில் ஊரடங்கு 30-ந்தேதி வரை நீட்டிப்பு


ஆந்திராவில் ஊரடங்கு 30-ந்தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2021 12:23 AM GMT (Updated: 2021-06-19T05:53:10+05:30)

ஆந்திர மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை, ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்து முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

விஜயவாடா, 

ஆந்திர மாநிலத்தில் கொரோனா ஊரடங்கை, ஜூன் 30-ந்தேதி வரை நீட்டித்து முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சுகாதார அதிகாரிகள், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்பு இந்த முடிவை அவர் அறிவித்தார். ஆந்திராவில் கொரோனா தொற்று உச்சம் தொட்டதால் மே 5-ந்தேதி முழு ஊரடங்கு 15 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது. 

அதன்பிறகு ஊரடங்கு 3 முறை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. முந்தைய ஊரடங்கு வரும் 21-ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில தற்போது ஊரடங்கு 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. காலை 6 மணி முதல் 2 மணிவரை இருந்த தளர்வுகள், இனி மாலை 6 மணிவரை நீடிக்கும். கொரோனா தொற்று அதிகமுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் தற்போதுள்ள நிலவரப்படி மதியம் 2 மணி வரை மட்டுமே தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 

கடைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம். அரசு அலுவலகங்கள் வழக்கம்போல அனைத்து ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

Next Story