தடுப்பூசி போட்டுக்கொள்வதால், கொரோனா தாக்கினாலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவு - ஆய்வில் தகவல்


தடுப்பூசி போட்டுக்கொள்வதால், கொரோனா தாக்கினாலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவு - ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 19 Jun 2021 1:24 AM GMT (Updated: 19 Jun 2021 1:24 AM GMT)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால், கொரோனா தாக்கினாலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு 80 சதவீதம் குறைவு என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடம் முதலில் தயக்கமும், பயமும் நிலவியது. ஆனால் கொரோனாவின் 2-வது அலையில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு, தடுப்பூசி ஒன்றுதான் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கவசம் என்று புரிந்துகொண்டனர். இதனால் தற்போது தடுப்பூசிக்கு மவுசு கூடி உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த நிலையில் தடுப்பூசியின் பலன்கள் குறித்து சுகாதாரப்பணியாளர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

அதன் முக்கிய அம்சங்கள் இவைதான்:-

* கொரோனா வைரஸ் தொற்று உச்சம் தொட்ட மே மாதம் 10-ந் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட தினசரி பாதிப்புகளில் 85 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

* கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் தொற்று ஏற்பட்டாலும்கூட அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள 75 முதல் 80 சதவீதம் குறைவாகவே உள்ளது.

* ஆக்சிஜன் தேவை 8 சதவீதமாக குறைகிறது.

* மே 10-ந் தேதிக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 78.6 சதவீதம் குறைந்துள்ளது.

* கொரோனா வாராந்திர பாதிப்பு விகிதம், 81 சதவீதம் குறைந்துள்ளது.

* 513 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு விகிதம், 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story