சிவசேனா முன்பை விட மிகவும் வலிமையானதாக உருவெடுத்துள்ளது - உத்தவ் தாக்கரே


சிவசேனா முன்பை விட மிகவும் வலிமையானதாக உருவெடுத்துள்ளது - உத்தவ் தாக்கரே
x
தினத்தந்தி 19 Jun 2021 4:49 PM GMT (Updated: 2021-06-19T22:19:05+05:30)

சிவசேனா முன்பை விட மிகவும் வலிமையானதாக உருவெடுத்துள்ளது என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சி மூலம் மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். 2019-ம் ஆண்டு முதல் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிவசேனா கட்சி முன்பை விட மிகவும் வலிமையானதாக உருவெடுத்துள்ளது என்று மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், சிவசேனா முன்பை விட மிகவும் வலிமையானதாக உருவெடுத்துள்ளது. ஆட்சியை இழந்த பின்னர் சிலருக்கு (பாஜக கட்சி) வயித்தெரிச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு என்னால் மருந்துகொடுக்க முடியாது. ஆனால், அவர்களுக்கு நான் அரசியல் மருந்து கொடுப்பேன்’ என்றார். 

Next Story