சபாநாயகர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


சபாநாயகர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு: ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 19 Jun 2021 8:08 PM GMT (Updated: 2021-06-20T01:38:34+05:30)

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சபாநாயகர் பதவி ஏற்று நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி வருமாறு:-

கடந்த 2 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை செம்மைப்படுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகளை ஓம் பிர்லா எடுத்தார். மக்களவையின் செயல்பாட்டை உயர்த்தினார். அதனால், வரலாற்று சிறப்புமிக்க, மக்கள் நலன்சார்ந்த பல்வேறு மசோதாக்கள் நிறைவேறின.

புதுமுக எம்.பி.க்கள், இளம் எம்.பி.க்கள், பெண் எம்.பி.க்கள் ஆகியோருக்கு சபையில் பேச வாய்ப்பு அளிப்பதில் தனி கவனம் செலுத்தினார். பல்வேறு நிலைக்குழுக்களை வலுப்படுத்தினார். அவருக்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story