கொரோனா தடுப்பூசி போட்டாச்சா...? பிடி 50% தள்ளுபடி: அரியானாவில் ஆஃபர்


கொரோனா தடுப்பூசி போட்டாச்சா...? பிடி 50% தள்ளுபடி:  அரியானாவில் ஆஃபர்
x
தினத்தந்தி 20 Jun 2021 2:38 AM GMT (Updated: 2021-06-20T08:08:28+05:30)

அரியானாவில் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கு உணவு விடுதி மற்றும் பப்களில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.குருகிராம்,

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.  இந்நிலையில், அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள உணவு விடுதிகள், பப்கள் மற்றும் மதுபான பார்களில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் எடுத்து கொண்டவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.  ஒரு டோஸ் எடுத்து கொண்டவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு சலுகைகளால் வர்த்தகம் மேம்படுவதுடன், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என பப் உரிமையாளர் கூறுகிறார்.

இதேபோன்று அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் முன்கள சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதுபற்றி வணிக வளாக நிர்வாகியான கீதா கூறும்பொழுது, முன்கள சுகாதார பணியாளர்களை பாராட்டும் வகையில், இலவச கார் நிறுத்தும் சேவைகள் மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

அவற்றை பெறுவதற்கு அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை காட்டினால் போதும் என்று கூறியுள்ளார்.  தடுப்பூசி போடுவது ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்று மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பரவலாக வரவேற்பு பெற்றுள்ளன.


Next Story