கர்நாடகாவில் 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது தினசரி கொரோனா பாதிப்பு


கர்நாடகாவில் 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது தினசரி கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 Jun 2021 2:01 PM GMT (Updated: 20 Jun 2021 2:01 PM GMT)

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 120- பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தணிந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று தொற்று பாதிப்பு அதிரடியாக 5 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. 

கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “ கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,517- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8456- ஆக  உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 120- பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடகாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,26,813- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 45 ஆயிரத்து 735- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,883- ஆக உயர்ந்துள்ளது. 


Next Story