5 பெண்களை திருமணம் செய்த சாமியார்; திருமண இணைய தளம் மூலம் சிறுமிகளுக்கு வலை


5 பெண்களை திருமணம் செய்த சாமியார்; திருமண இணைய தளம் மூலம் சிறுமிகளுக்கு வலை
x
தினத்தந்தி 21 Jun 2021 7:32 AM GMT (Updated: 2021-06-21T13:11:44+05:30)

உத்தர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல், ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

கான்பூர்

உத்தர பிரதேசத்தில் ஷாஜகான்பூரில்  'பாபா' என, தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் அனுஜ் சேட்டன் சரஸ்வதி கேத்ரியா என்ற போலி சாமியார், 2005ல், மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.பின், 2010ல், பரேலியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை,அனுஜ் திருமணம் செய்தார்.இவர்களும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து, 2014ல், அனுஜ் மூன்றாவது திருமணம் செய்தார். பின், மூன்றாவது மனைவியின் உறவு பெண்ணை, நான்காவதாக திருமணம் செய்தார். அந்த பெண், முந்தைய திருமணங்கள் குறித்து அறிந்து, தற்கொலை செய்து கொண்டார்.

இதைஅடுத்து, 2019ல், ஐந்தாவதாக அனுஜ், மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அனுஜ் துன்புறுத்தியதன் காரணமாக, அவர் மீது அந்த பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அவரின் மற்ற மனைவியருக்கு இது குறித்த விபரம் தெரியவந்தது.இதர மனைவியரிடமிருந்து இதுவரை விவாகரத்து முறையாக பெறப்பட வில்லை. எனவே அவர்கள், போலீசாரிடம் புகார் அளித்துஉள்ளனர்.

சாமியார் அவர்களுக்கு  போதை மருந்து ஊசி போட்டு விபச்சாரத்தில்  தள்ளப்படுவதாகவும்  மேலும் எதிர்ப்பு தெரிவித்ததற்காக தாக்கப்படுவதாகவும் கூறி உள்ளனர். சாமியாரின்  சித்திரவதை காரணமாக ஒரு மனைவிதற்கொலை செய்து கொண்டதாகவும்  கூறப்படுகிறது.

ஷாஜகான்பூரின் நிகோஹி காவல் நிலையப் பகுதியில் மா காமக்கியா பஞ்சரே பாபா கல்யாண் சேவா அறக்கட்டளை என்ற பெயரில் பாபா அனுஜ் ஒரு ஆசிரமத்தை நடத்தி வந்தார்.பாபா அனுஜ் கதரியாவும் திருமண தகவல் இணைய தளத்தில்  தனது சுயவிவரத்தை லக்கி பாண்டே என்ற பெயரில் பராமரித்து வந்தார்.போலீசார் விசாரணையில், அதில் அனுஜ் சுமார் 32 சிறுமிகளுடன் அரட்டை அடித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.அதன் பதிவும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளுடன் அரட்டையடிக்கும்போது, ​​பாபா சில சமயங்களில் தன்னை ஒரு ஆசிரியர் என்றும் சில சமயங்களில் ஒரு ஓட்டலின் உரிமையாளர் என்றும் கூறிக்கொள்வார்.எட்டாம் வகுப்பு வரை படித்த பாபா அனுஜ், தன்னை பி.எஸ்சி பாஸ் என்று சொல்லி ஆங்கிலத்தில் அரட்டை அடிப்பார்.

அனுஜ் தனது தம்பியின் மனைவியை கூட விட்டுவைக்கவில்லை. தம்பியின் மனைவி ஷாஜகான்பூரில் உள்ள நிகோஹி காவல் நிலையத்தில் 2018 ஆம் ஆண்டில் பாலியல பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளார்.

Next Story