ராகுல் காந்தி உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மத்திய மந்திரி வேண்டுகோள்


ராகுல் காந்தி உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: மத்திய மந்திரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 Jun 2021 1:50 PM GMT (Updated: 21 Jun 2021 1:50 PM GMT)

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அதன் தயாரிப்பு நிறுவனங்களே விலை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அதன் தயாரிப்பு நிறுவனங்களே விலை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, தடுப்பூசிகள் அனைத்துக்கும் ஒரே மாதியான விலை இருக்க வேண்டும், மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது.

இதையடுத்து இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. எனினும் தடு்ப்பூசி விலை விவரம், பற்றாக்குறை போன்ற விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “ ராகுல் காந்தி தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பதை அறிவிக்கவில்லை. நீங்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை எனில் உடனடியாக போட்டுக் கொள்ளவும். இதனை உங்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார்.


Next Story