கர்நாடகாவில் மேலும் 4867- பேருக்கு கொரோனா


கர்நாடகாவில் மேலும் 4867- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Jun 2021 3:19 PM GMT (Updated: 21 Jun 2021 3:19 PM GMT)

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் 3.25 சதவிகிதமாக உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4867- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 8404- பேர் குணம் அடைந்துள்ள நிலையில்,  142- பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடகாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 134- ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 54 ஆயிரத்து 139- ஆக உள்ளது.

 தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,025-ஆக உயர்ந்துள்ளது. கர்நடகாவில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 3.25 சதவிகிதமாக உள்ளது. 

Next Story