குரங்கு பயணித்த விவகாரம்: டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்


குரங்கு பயணித்த விவகாரம்: டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம்
x
தினத்தந்தி 21 Jun 2021 3:58 PM GMT (Updated: 21 Jun 2021 3:58 PM GMT)

டெல்லி மெட்ரோ ரெயிலில் கடும் பாதுகாப்புகளை மீறி ஒரு குரங்கு உள்ளே நுழைந்து பயணம் செய்த காட்சிகள் வைரலானது.

புதுடெல்லி,

நாட்டில் பரபரப்பாக இயங்கும்  மெட்ரோ ரெயில் சேவைகளில் டெல்லி மெட்ரோ ரெயிலும் அடங்கும். பாதுகாப்பு கெடுபிடிகள் எப்போதும் அதிகம் இருக்கும். ரெயிலில் பயணம் செய்ய அதன் உள்ளே நுழையும் பயணிகள் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாவது உண்டு. 

இத்தகைய சூழலில், டெல்லி மெட்ரோ ரெயிலில் குரங்கு  ஒன்றி பயணம் செய்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகின.   யமுனா பாலம் மற்றும் இந்திரபிரஸ்தாவிற்கு இடையிலான புளூ லைன் தடத்தில் குரங்கு பயணம் செய்தது தெரியவந்தது. நல்லவேளையாக அக்குரங்கு உள்ளே இருந்த சகபயணிகளுக்கு எந்த தொல்லையும் தராமல் அமைதியாகப் பயணம் செய்துள்ளது.

மெட்ரோ ரயிலுக்குள் ஒரு குரங்கு பயணித்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது பற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அக்சர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயிலுக்குள் புகுந்த குரங்கு பற்றி ரயில் நிலைய ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அடுத்த ரயில் நிலையத்தில் குரங்கு வெளியேற்றப்பட்டது என்று விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே வேளையில், குரங்கு போன்ற விலங்குகளுக்கு மெட்ரோ ரயில் பயணிகள் உணவளிப்பது போன்ற எதையும் செய்ய வேண்டாம் என்றும், அது சில வேளையில் ரயில் பயணிகளுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story