தெலுங்கானாவில் முதல்-மந்திரி காலில் விழுந்த கலெக்டர்கள்; பெரியவர்களிடம் ஆசி பெறுவது கலாசாரம் என அதிகாரி விளக்கம்


தெலுங்கானாவில் முதல்-மந்திரி காலில் விழுந்த கலெக்டர்கள்; பெரியவர்களிடம் ஆசி பெறுவது கலாசாரம் என அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 21 Jun 2021 6:06 PM GMT (Updated: 2021-06-21T23:36:09+05:30)

தெலுங்கானாவில் முதல்-மந்திரி காலில் கலெக்டர்கள் விழுந்து வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை, முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். அப்போது அந்த மாவட்ட கலெக்டர் வெங்கடராம் ரெட்டி, அருகில் இருந்த முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் கால்களை திடீரென தொட்டு வணங்கினார்.

 மாநில தலைமைச் செயலர் சோமேஷ் குமார் உள்ளிட்ட பல மூத்த அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில் முதல்-மந்திரியின் கால்களை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தொட்டு வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கலெக்டர் வெங்கடராம் வெளியிட்ட அறிக்கையில், முதல்-மந்திரி எனக்கு தந்தையைப் போன்றவர். விசேஷமான நாட்களில் பெரியவர்களிடம் ஆசி பெறுவது மாநில கலாசாரம். எனவே, புதிய அலுவலகத்தில் பொறுப்பேற்பதற்கு முன், அவரிடம் ஆசி பெற்றேன் என விளக்கம் அளித்தார்.

இதேபோல் கமரெட்டி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் காலில் கலெக்டர் சரத் விழுந்து வணங்கினார் இது மீண்டும் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story