ஆந்திரா, தெலுங்கானாவுக்கு இன்று முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடக்கம் - கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு


ஆந்திரா, தெலுங்கானாவுக்கு இன்று முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடக்கம் - கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 10:20 PM GMT (Updated: 21 Jun 2021 11:25 PM GMT)

ஆந்திரா, தெலுங்கானா வெளிமாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து சேவையை தொடங்குவதாக கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை தடுக்க கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அப்போது முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து 55 நாட்களுக்கு பிறகு கர்நாடகத்தில் நேற்று முதல் அரசு-தனியார் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வெளிமாநிலங்களுக்கும் பஸ் போக்குவரத்து சேவையை தொடங்குவதாக கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து. 

இந்த பஸ்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள், கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Next Story