பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்


பிரதமர் மோடி தலைமையில்  நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2021 10:11 AM GMT (Updated: 2021-06-22T15:41:54+05:30)

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2 வது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் வேகம் தணிந்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடபெறுகிறது. 

இந்தக் கூட்டத்தில்  தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவு படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கலாம் எனக்கூறப்படுகிறது. காஷ்மீர் தலைவர்கள்  உடன் பிரதமர் மோடி  நாளை மறுநாள் ஆலோசனை  நடத்த உள்ள  சூழலில் பிரதமர் மோடியின் தலைமையில் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story