கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று அதிகரிப்பு


கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2021 1:28 PM GMT (Updated: 22 Jun 2021 1:28 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா 2-வது அலை பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாட்டில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக கேரளா தான் உள்ளது. மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டி பின் வேகமாக சரிந்தது. 

எனினும், கேரளாவில் கடந்த சில நாட்களாக சராசரியாக 12 ஆயிரத்தை ஒட்டியே தினசரி பாதிப்பு இருந்து வருகிறது. நேற்று தொற்று பாதிப்பு 7 ஆயிரம் என்ற எண்ணிக்கை வந்தது. ஆனாலும் பரிசோதனைகளும் கணிசமாக குறைந்து இருந்தன. 

இந்த நிலையில், இன்று கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,617 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 11,730- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,00,437- ஆக உயர்ந்துள்ளது.  கேரளாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,17,720- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.72- சதவிகிதமாக உள்ளது.

Next Story