தெலுங்கானா, பஞ்சாப், இமாசல பிரதேச மாநில கொரோனா பாதிப்பு விவரம்


தெலுங்கானா, பஞ்சாப், இமாசல பிரதேச மாநில கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 22 Jun 2021 5:22 PM GMT (Updated: 22 Jun 2021 5:22 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தணியத்தொடங்கியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் இன்று 1,175- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 1,771- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,640- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 95 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,586- ஆக உயர்ந்துள்ளது. 

இமாசல பிரதேசத்தில் இன்று 188- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 314- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,276- ஆக உள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் இன்று 409- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 880- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 20 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 5,968- பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்து 207- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15,888- ஆக உள்ளது. 


Next Story